இங்கிலாந்து அணியில் ஸ்மித்: ஆஷஸ் தொடருக்கு தயாராக | ஜனவரி 19, 2023
ஹோவ்: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் சசக்ஸ் அணியில் இணைந்தார்.
இங்கிலாந்து செல்லவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 16ல் பர்மிங்காமில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் முறையே லண்டன் லார்ட்ஸ் (ஜூன் 28 – ஜூலை 2), லீட்ஸ் (ஜூலை 6–10), மான்செஸ்டர் (ஜூலை 19–23), லண்டன் ஓவலில் (ஜூலை 27–31) நடக்கவுள்ளன. தவிர, ஜூன் மாதம் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சீசனுக்கான பைனலில் ஆஸ்திரேலிய அணி விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதற்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் 33, இங்கிலாந்தின் கவுன்டி அணியான ‘சசக்ஸ்’ அணியில் இணைந்தார். ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தில் உள்ள இவர், இந்த அணிக்காக வரும் மே மாதம் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளார். கடந்த 2019ல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் அசத்திய ஸ்மித், 774 ரன் (சராசரி 110.57) குவித்திருந்தார்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில், ‘‘சசக்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களுடன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர்களுக்கு கிரிக்கெட் குறித்த ஆலோசனை வழங்குவேன் என்று நம்புகிறேன்,’’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
